Wednesday, September 14, 2016

இரவல் புன்னகைகளின் தேடல் ===•••===•••===•••===••


அப்படியொன்றும் வியப்பாய்
பார்க்காதீர்கள் என்னை ...
நானும் உங்களைப் போல்தான்

ஒரு சாதாரண வீதியில்
நடந்திருந்தவன்தான்
ஒரு மின்னல் சாய்க்கும்வரை.....
ஏடுகளைக் கூட தொடாத கைகளால்
புத்தக வெள்ளங்களில்
காணாமல் போயிருக்கிறேன் பலதடவை
ஏதோ ஒரு கவிதையை
அவளுக்காகத் தேடித் தேடி!
அவள் கடந்து சென்ற போதுதான்
வண்ணங்கள் என் ஆடைகளில்
இறங்கத் தொடங்கின..
நிலைக்கண்ணாடிகளில் நிமிடமல்ல
மணிகளையே தொலைத்திருக்கிறேன்!
என்னுடைய வீதிகளில் விழிபதித்தே
மாண்டிருக்கிறேன் பலநாள்கள்
அவள் பாத ஓசைகளில்..!!!
ஒரு புன்னகையை மட்டும்
இரவல் தந்த அவளுக்காகத்தான்
திருப்பித்தர ..
இதோ இன்றும் அதே வீதியில்
கிழிந்து கந்தலாகி!!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment