பரிசும் பாராட்டும் பெற்ற கவிதைகள்



கல்வெட்டு ஏப்ரல் 2020
===========================================================================


கல்வெட்டு மார்ச் 2020
===============================================================================


================================================================

=======================================================================





==========================================================================


=============================================================




==========================================================================

இனிய நண்பர் திரு.நந்தகுமார் அவர்கள் எனது ‘சூரியன் மேயும் சமவெளிகள்’ கவிதைத் தொகுப்பைப் படித்து விட்டு பதிந்த கருத்துரையில் மனம் நெகிழ்ந்தேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தலைவரே. இக்கவிதைத் தொகுப்பை அவருக்கு அறிமுகப்படுத்திய நண்பர் சலீம் கான் ( சகா ) அவர்களுக்கும் நன்றி.







சூரியன் மேயும் சமவெளிகள் - மலேசிய நண்பர் முனியாண்டி ராஜ் அவர்களின் கவிதை நூல்.

என்னைப் பொறுத்தவரை இது ஒரு பொக்கிஷம். சமீபத்தில் நான் சென்னை சென்றிருக்கும் போது என்னை சந்தித்த தோழரும் கவிஞருமான சகா எனக்கு அளித்த அன்பளிப்பு.

140க்கும் மேற்பட்ட கவிதைகள். எளிமையான சொற்கள். பெரும்பாலான கவிதைகள் மழையை கொண்டாடித் தீர்க்கிறது.

முகப்பு அட்டை முதல் கடைசி அட்டை வரை வடிவைப்பு அருமை.
கவிதைகளுக்கான படங்கள் எங்கிருந்து எடுத்தாரோ...அவ்வளவு பொருத்தம்...அழகழகான படங்கள்..ஓவ்வொரு பக்கத்திலும் மேல் முனையில் பூக்கள் பூத்துக் குலுங்கும் மரத்தின் ஒரு சின்ன பூங்கொத்து வாசிக்கும் போது வாசனைத் தரும் உணர்வு.

மழையைக் கொண்டாடிய கவிஞர் பிரிவுத் துயரையும் அதிகம் பதிவு செய்திருக்கிறார்.
..

வெள்ளிக் கம்பிகளாய் நீண்டு இறங்கி
முகத்தில் குத்திவிட்டு
மௌனமாய் களைந்து போகிறது
மழை..
தூவும் ஆரவார இசையில்
மனம் ஒன்றி....
குடையை வீசிவிட்டு
கைகளை வீசி நடப்பதில்
கால்களில் முளைக்கிறது இறக்கை
மழையின் எண்ணங்களில்
விரட்டி விரட்டி பிடிக்கும்
கற்பனைகள் விரல்கள்...
சட்டென்று முடமாகின்றன...
“மழையிலா விளையாடுற....இரு வரேன்”
என்ற வார்த்தைகளில்
மடாரென உடைந்து விழுகிறது
குழந்தை கனவுகள்...
......

நீ வீசிச் சென்ற வார்த்தைகளை
இறக்கத் தெரியாமல்
சுமந்து வருகிறேன்
இரவின் கரையோரம்
...
இது மாதிரி அழகழகான கவிதைகள். ஆனால் எல்லாக் கவிதைகளையும் ஒரே தொகுப்பில் வழங்காமல் இரண்டு அல்லது மூன்று தொகுப்பில் வழங்கியிருக்கலாம்.

கலையும் கனவுகள் இரண்டு இடங்களில். பதிவு செய்யப் பட்டிருக்கிறது. ஒரு எழுத்துப் பிழை இல்லை..
தோழர் முனியாண்டி அடுத்தடுத்த படைப்பில் இதிலிருக்கும் குறைகளை களைவார் என நம்புகிறேன்.
மேலும் பல வெளியீடுகள் கொண்டு வர வாழ்த்துக்கள்.
அழகாய் பக்கங்களை வடிவமைத்த நண்பர் மாறனுக்கும்
வெளியிட்ட நிலா அச்சகத்திற்கும் அன்பும் வாழ்த்தும்.
புத்தகம் பெற நண்பர் முனியாண்டியை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி..
=================================================================

=================================================================


==================================================================





































================================================================






































































-------------------------------------------======================================
2018























===================================================================



































==================================================================
அயலக இதழொன்றில் கவிதை தவிர்த்து என் படைப்பொன்று இடம்பெறுவது இதுவே முதல் தடவை. வாய்ப்பளித்த படைப்புக் குழும நிறுவனர் நண்பர் ஜின்னா அஸ்மி அவர்களுக்கும், தகவு இதழின் ஆசிரியர் சகோதரி ஆசியதாரா அவர்களுக்கும், படைப்புக் குழும நண்பர்களுக்கும் இவ்வேளையில் என் மனமார்ந்த நன்றி.



===============================================================










=========================================================
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக என் கவிதைகளைத் தாங்கிவரும் ஓர் இலக்கியக் குழுமம். என்னைப் போன்ற இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் பேராவல். கடந்த முறை எனக்குக் ‘கவிச்சுடர்’ என்ற விருதினை அளித்துப் பெருமைப்படுத்தியக் குழுமம். நான் எழுதுவது கவிதையா என என்னை நானே கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவற்றிற்குப் பலவாறாக கருத்துரைத்தும் பின்னூட்டமிட்டும் என்னை உற்சாகப்படுத்திய படைப்புக் குழும நண்பர்கள். பலமுறை என் கவிதைகளைப் படைப்பு மின்னிதழில் பதிப்பிட்டு என்னைப் பெருமைப்படுத்திய பெருமை படைப்புக் குழுமத்தினரது. அதன் இயந்திரம் சகோதரர் முகமது ஜின்னா அவர்களை நேரில் சந்திக்க வேண்டுமென்ற உந்துதல். இவையனைத்துமே படைப்பு இரண்டாம் ஆண்டு விழாவில் எப்படியும் கலந்துகொள்ள வேண்டுமென்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்தியது.
பல பணிகளுக்கிடையிலும் விடியற்காலை இரண்டு மணிக்கு என்னை அழைத்துக் கொண்டு, தங்குமிடமும் ஏற்பாடு செய்து தந்த ஜின்னா அவர்கள் நன்றிக்குரியவர். மேலும், நண்பர் கட்டாரி தமிழ், சகோ சலீம்கான், நண்பர் சிவகுமார், நண்பர் மதன்குமார், நண்பர் மகுடபதி அவர்களுக்கும் சிறப்பான நன்றி. இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிய நண்பர் இபுராகிம் அவர்களுக்கும் நன்றி.
படைப்பு நிகழ்ச்சியில் நான் பார்த்து அளவளாவிய படைப்புக் குழும நண்பர்கள்,
நண்பர் முகமது பாட்சா,
நண்பர் சந்துரு,
நண்பர் தனபால் பவானி,
நண்பர் மஞ்சு விசுவநாதன்,
நண்பர் ஆண்டன் பெனி,
நண்பர் மனோ ரெட்,
நண்பர் கதிரவன்,
நண்பர் இராஜன்,
நண்பர் ரூபல்ஸ் அந்தோணி,
நண்பர் ஜோசப்,
நண்பர் ரஜினிகாந்தன்,
நண்பர் சத்யா மது,
நண்பர் லதா நாகராஜன்,
நண்பர் குறிஞ்சி நாடன்,
நண்பர் மணிமாறன்,
நண்பர் கவி விஜய்,
நண்பர் ஶ்ரீதரன்,
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்
இப்படிப் பெயர் மறந்த பல நண்பர்களையும் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இம்முறை என் கவிதைகள் இரண்டின் சிறப்புப் பரிசை என் கவிதைக் குரு கவிஞர் மேத்தா அவர்களின் கையால் பெறச் செய்த நண்பர் ஜின்னா அவர்களுக்கு மீண்டும் நன்றி.












Valli Muniandy, Kanagarajan Maruthan and 12 others

9 comments

Like

Comment

Share

No comments:

Post a Comment