Friday, February 10, 2017

பாரதி



அவன் மீசையின் வீரியத்தில்
முளைத்தன 
விடுதலைகளின் தீப்பொறிகள்
மைதொட்டு எழுதினோர் மத்தியில்
அவன்
மெய்தொட்டே எழுதினான்
எழுத்துகளில் தீ வைத்தவன்
அவன்..
பற்றி எரிந்தவை
வாழ்வின் ஒளிக்கப்பட்ட தீண்டாமைகள்
கவிதையை இரசித்தவர் முன்னே
அவன்
கவியென்னும் வளையத்துள்
வாழ்ந்து காட்டியவன்
கவிதைகளைத் துரத்தி
விலங்குகளுடன் காவல்துறையை
அலைய வைத்தவன்
அவனாகத் தான் இருக்க முடியும்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமென
கோழையைச் சாடியவன்
மீசைக்குத் துமுக்கிகள் அஞ்சுமாயென
ஆங்கில ஏதாதிபத்தியத்தைக்
கேட்டுக் கொண்டு வாருங்கள்
அதுவரை ....
மற்றவர் மீசை
வளைந்தே இருக்கட்டும்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment