என் வாழ்க்கையின்
ஓரமாக
கொஞ்சமாவது
நடந்து வந்திருக்கிறாயா..
என் கவலைகளுள்
சிறிதேனும்
எட்டிப்
பார்த்திருக்கிறாயா..
என் மகிழ்ச்சியின்
தருணங்களில்…
என் விசனத்தின்
அழுகைகளில்….
என் வெற்றியின்
களிப்புகளில்…
என் தோல்வியின்
துவண்டல்களில்…
ஏதேனும்
ஒன்றில்
உன் முகத்தைக்
காண்பித்திருக்கிறாயா..
என் தோளில்
கைவைத்து
என்னை
ஆறுதல் படுத்தியோ...
என் முதுகில்
தட்டிக் கொடுத்து
என்னைப்
பாராட்டியோ..
என் கண்ணீரில்
உன்னையும்
கரைத்துக் கொண்டோ….
ஏதேனும்
ஒன்றில்
என் மனதில்
தடம் பதித்திருக்கிறாயா..
என் காயங்களின்
வலிகளில்
உன் மனதும்
வலித்திருக்கிறதா…
என் விரல்களின்
காயங்களில்
உன் விரலும்
வடித்திருக்கிறதா குருதி..
என் புன்னகைகளின்
அதிர்வுகளில்
நீயும்
கலைந்திருக்கிறாயா…
சொல்
நண்பா …
நான்
வாழ்ந்த வாழ்வின் தடங்களை
சொல்….
எனக்கு
முகமன் சொல்வதிலும்
என் முதுகில்
செருகுவதற்கும் நேரத்தை விடுத்து…
என் அடுத்த
வாழ்விற்கான அடிகளை
நீயே
எடுத்துக் கொடு!
அதுவரை….
என் வாழ்வை
நானே வாழ
எனக்கு
வழிவிட்டு விலகு!
^^^முனியாண்டி ராஜ்^^^
No comments:
Post a Comment