அந்த மேகங்களுக்குள்தான் ஒளிந்திருந்தது
உன் கடும் மழைகருமை சுமந்து நீ
உடலெங்கும் வன்முறை நிகழ்த்தியபோது
இதயம் மட்டுமே நனைந்தது..
எச்சரிக்கை மின்னல்களிலும்
செவியறைந்த இடிகளிலும்
குடைகள்
என்னைத்தான் குற்றம் சொல்கின்றன!
#முனியாண்டி_ராஜ்.
நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...