Friday, February 10, 2017

உடையாத_நீர்க்குமிழி




#உடையாத_நீர்க்குமிழி

ஒரு போராட்டத்தின் மிச்சம்
இன்னுமிருக்கிறது
விழுதுகளில் விஷங்களிட்டும்
வேர்களின் ஆழங்கள்
இதயங்களில் ஆழ்ந்து பரவியிருக்கிறது
முறித்து வீசப்பட்ட கிளைகள்
மக்கி மண்ணாகி விட்டதாக
நீங்கள் எண்ணியிருக்கலாம்..
எருவாக வேர்களில் இறங்கியிருப்பது
உங்களுக்குப் புரியாமலேயே இருக்கட்டும்
பொங்கிவரும் நீர்க்குமிழிகளை
அமிழ்த்தும் முறித்தும்
நீங்கள் சிதைத்து விடலாம்
அவதானியுங்கள்
தேங்கும் நீரிலும் ஓடும் நிலையிலும்
உதித்துக் கொண்டே வரும் நீர்க்குமிழிகளை!

#முனியாண்டி_ராஜ்.

#கங்கா_புத்திரன்_நினைவு_பரிசுப்போட்டி

வெள்ளை_என்பது_நிறமல்ல...


===•••===•••===•••===•••
திமிறிக்கொண்டு வெளியேறும்
வெளிச்சக்கீற்றுகளில்
இருளின் குரல்வளை நெறிக்கப்படுவதாய்தான்
நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்
உண்மைகள் கழுத்தறுப்படும்
கொலைகளங்களின் முகங்களும் முகமன்களும்
உங்கள் விழிகள் அறியாமலேயே
நகர்த்தப்படுகின்றன
சர்க்கரை தடவிய உதடுகளிலும்
அமுதம் தோய்த்த முனைகளும்
போதும்
பொய்களின் சுவைகளில்
உங்கள் நா மரிப்பதற்கு..
வெளிச்சங்களில் உங்களை அறிவதற்குமுன்
இருளில் தொலைந்து வாருங்கள்
வெள்ளை எனபது நிறமல்ல..
அது வண்ணக்கலவைகளின் கூட்டு..
கண்ணறியா கறுப்பும்
அதில் சங்கமித்திருக்கலாம்

வெள்ளைகள் துப்பிய உலகில்
மீண்டும்
நுழைய முற்படுகிறேன்...
வெளிச்சக் கீற்றுகளில்
கரும்நுழைகள் பிடித்தவாறே!

#முனியாண்டி_ராஜ்.

மௌனம்

உன் மௌனங்களில்
நான் பயணிக்கும் போதெல்லாம்
ஏதோ ஒரு கவிதை
என்னைக் கடத்திக் கொண்டு 
போய் விடுகிறது

முகநூல் நட்பென்று



நிறமற்ற ஒரு மழையில்
அவனுடன் நடந்தே வருகிறேன்
அச்சுறுத்தல் அகன்ற
அந்த இரவின் விளிம்பில்
என்னைப் போல் 
யாரேனும் ஒருவன் வரக்கூடும்
அவன் கண்ணுக்குத் தெரியாத
என்னையும்
என் கண்ணுக்குத் தெரியாத
அவனையும் சுமந்தே
இந்தப் பாதைகள் நீள்கின்றன
விருப்புகளென்று!!

முகங்கள் தோன்றும்
ஏதாவது ஒரு வெளிச்சத்தில்
முகமன் புன்னகையுமின்றி
நானும் அவனும்
மீண்டும் தொடர்வோம் பயணங்களை...
முகநூல் நட்பென்று!

#முனியாண்டி_ராஜ்.

துளிப்பா 08

குடை மறுத்து நீ
மழை நனையும்போது தெரிகிறது
நிலவின் அழகு
--------------------------------
உன் உதட்டுச் சாயங்களில்
இரவல் கொண்டு வாழ்கிறது
அந்திச் சூரியன்
---------------------------------
எழுதப்படாத ஒரு கவிதைக்காக
உன்னை நோக்கித் தலை சாய்கிறது
வானவில்
-------------------------------------

தானியங்கி பணப்பட்டுவாடா
உயிர் இயந்திரங்கள்
அப்பாக்கள்


புன்னகைகளை முகத்தில் வைத்து
முதுகில் குத்திவிட்டுப் போகிறது
துரோகம்




வானில் குதித்த களிப்பில்
ஜன்னல் ஓரம் விழுந்தது
விழியில் நிலா

#அன்பெனும்_அப்பா







#அன்பெனும்_அப்பா

தூக்கம் மறந்து
நீ துக்கம் சுமந்ததாய் சொன்னார்கள்
தூக்கிப் போட்டுக் கொஞ்சும்
வேளைகளிலும்
உன் இமைகளை என்
முதுகில் பதித்திருந்ததாக கூறினார்கள்
உன் தோள்மீது அமர்ந்துதான்
உலகத்தையே முதன்முதலில் பார்த்ததாக
உடனிருந்தவர்கள் பகன்றார்கள்
காலணி மறந்த உன் கால்கள்தாம்
என் காலணிகளாக மாறினயெனவும்
அன்பாக எடுத்துரைத்தார்கள்
கண்டிப்பு என்ற பெயரில்
கதவுகளுக்குப் பின்னால்
உன் கண்கள் சிந்திய
கண்ணீரின் மீதத்துளிகளைக் காட்டினார்கள்
இடுப்புயர வளர்ந்த பின்னும்
என் முதுகெலும்பாக நீ
உடன்வந்ததைக் கதையாகவே கூறினார்கள்
புள்ளிகள் பார்த்த கல்வியில்
நீ
என் புரிதலை மட்டுமே கண்டதாக
ஆசிரியர்களும் கேலி செய்தனர்
திருமணம் உன் தேர்வென
தேர்வெழுத என்னையே முன்னிறுத்தியாக
உறவுகள் பொறாமையாகப் பார்த்தனர்
தோளுயரம் வளர்ந்துயர்ந்த
ஒரு புரிதலுக்குப் பின்
நீ எங்கேயெனத் தேடுகிறேன்
என் அன்பெனும் அப்பா..

#முனியாண்டி_ராஜ்.

இழந்து போனவை இறந்து போனவை




இழந்து போனவை இறந்து போனவை
===•••===•••===•••===•••===••
இன்னும் எனக்கு வியப்புதான்
இறக்கையின்றி 
அவை எப்படிப் பறந்திருக்க முடியும்
கால்களின்றி
அவை எப்படி நடந்திருக்க முடியும்
இரவலென்று வாங்கிச் சென்றவர்கள்
எப்படி அதைப் பெயரிட்டிருப்பார்கள்
பெயர் எங்கே எழுதியிருப்பார்கள்
என் பெயர் அழித்தா..
என் பெயர் வெட்டியா..
தாள் கிழித்து வேறொரு தாளிலா
சிந்தையில் சிக்கிக் கொண்டு
சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறேன்

இதயம் கழட்டி
எப்படி வாசித்திருக்க முடியும்
அறிவுத்திருட்டு என்றோ
அறிவுத் திரட்டென்றோ
ஒதுங்க மறுக்கும் கோபங்களை
எப்படிக் கட்டி வைப்பேன்
அடுக்குகளில் டக்கென்று உருவப்பட்டு
பட்டென்று களவுபோன நண்பர்களுக்காக
எவ்வாறு ஆறுதல் சொல்வேன்
வியப்பு வியப்பாகவே இருக்கிறது
வெற்றிடங்கள் வெற்றாகவே இருக்கட்டுமென
வேண்டுமென்றே வைத்திருக்கிறேன்
இன்னொரு புத்தகம்
இரவலில் இறந்து போகாமல் இருக்க!

#முனியாண்டி_ராஜ்.



இழந்து போனவை இறந்து போனவை
===•••===•••===•••===•••===••
இன்னும் எனக்கு வியப்புதான்
இறக்கையின்றி 
அவை எப்படிப் பறந்திருக்க முடியும்
கால்களின்றி
அவை எப்படி நடந்திருக்க முடியும்
இரவலென்று வாங்கிச் சென்றவர்கள்
எப்படி அதைப் பெயரிட்டிருப்பார்கள்
பெயர் எங்கே எழுதியிருப்பார்கள்
என் பெயர் அழித்தா..
என் பெயர் வெட்டியா..
தாள் கிழித்து வேறொரு தாளிலா
சிந்தையில் சிக்கிக் கொண்டு
சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறேன்

இதயம் கழட்டி
எப்படி வாசித்திருக்க முடியும்
அறிவுத்திருட்டு என்றோ
அறிவுத் திரட்டென்றோ
ஒதுங்க மறுக்கும் கோபங்களை
எப்படிக் கட்டி வைப்பேன்
அடுக்குகளில் டக்கென்று உருவப்பட்டு
பட்டென்று களவுபோன நண்பர்களுக்காக
எவ்வாறு ஆறுதல் சொல்வேன்
வியப்பு வியப்பாகவே இருக்கிறது
வெற்றிடங்கள் வெற்றாகவே இருக்கட்டுமென
வேண்டுமென்றே வைத்திருக்கிறேன்
இன்னொரு புத்தகம்
இரவலில் இறந்து போகாமல் இருக்க!

#முனியாண்டி_ராஜ்.

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...