Friday, February 10, 2017

கிழிக்கப்படாத_நாள்கள்




#கிழிக்கப்படாத_நாள்கள்
===•••===•••===•••==
உறக்கங்களைக் கலைத்துவிட்டு
நள்ளிரவு நகர்ந்து கொண்டிருக்கும் .....
திருட்டுத்தனமாய் நுழையும்
ஓரிரு நிலாக்கீற்றுக்களில்
உன் முகம் மெலிதாய்த் தெரியும்...

ஞாபகங்களை நகர்த்த முடியாமல்
கிணற்றில் விழுந்து கிடக்கும்
மனம் . . .. ..

மழை வருவதற்கு அடையாளமாய்
மேகங்கள் மோதிக் கொள்ளும்
வெளிச்சங்களில்.........

மீண்டும் மறைகிறாய் நீ

கிழிக்கப்படாமலேயே
ஆண்டுகள் இரண்டை விழுங்கி
தூசு படிந்திருக்கும் நாள்காட்டி .....

யார் சொல்லியும்
மாலைகளை உன் படத்தில் மாட்டி
ஞாபகங்களை ஒதுக்கி ஓடும்
முயற்சிகளை . . . .

நாளையும் ..
நான் செய்யப் போவதில்லை!

#முனியாண்டி_ராஜ்.

துளிப்பா 05

ஒற்றைத் தகுதியில்தான்
அவர்கள் தலைவரானார்கள்
என் மொழியின்றி
#முனியாண்டி_ராஜ்.

புத்தாண்டு வாண வெடிகளில்
தீயின்றி புகைந்து கொண்டிருந்தது
ஏழையின் வயிறு
--------------------------------------
சற்று தூரச்சென்று வெடியுங்கள்
வண்ண வெளிச்ச வீச்சுகளில்
கருகும் குடிசைகள்
--------------------------------------
#முனியாண்டி_ராஜ்.

துளிப்பா 04

மிருக வதைகளின் குரல்களில்
செத்துப் போய் விழுந்தது
பண்பாடு

கடவுள் பார்த்துக் கொள்வாரென்ற
துணிச்சல்களில்தான் காணாமல் போகின்றன
கோவில் நகைகளும் நம்பிக்கைகளும்

#முனியாண்டி_ராஜ்.

உனக்கான இரவும் எனக்கான பதிலும்




support_for_jallikattu

உரசாத வரை வெறுங்குச்சிதான்
உரசிப்பார் நீயே அறிவாய்
தீக்குச்சியென

அடக்குமுறை

நீ கூறிய வார்த்தைதானே
அது ..
காளை வேண்டாம்
சிங்கத்துடன் மோதென்றாய்
அலையென எழுந்த கர்ஜனைகளில்
ஆச்சரியப்படுகிறாய்..
தெற்கில் எப்படி இமயமென
விழிபிதுங்கி நிற்கிறாய்
அடக்குமுறைகளில் பேரலைகளை
எவ்வளவு நாள் கட்டிப்போடுவது....

துளிப்பா 03

மெரினா கடற்கரை மணல்களில்
நட்சத்திரங்களோடு ஒளிந்து கொண்டன
கொடிகளும் குறுநண்டுகளும்

புல்லுருவி

நல்மரத்தில் புல்லுருவியாய்
நெறியெனும் நஞ்சேற்றி
நாசம்செய் முற்படுவோர்
நண்பரெனும் போர்வைதனில்
நயவஞ்சகமாய் கலந்துவருவர்
நட்புகளே கவனம்காப்பீர்
உறங்கும் உறைவாளுள்
உன்னுயிர் சிதைக்கவே
உணர்ச்சிமிக ஏத்திடுவர்
உண்மைதனை ஒளித்திடுவர்
உலகமகா சதிவலையில்
உன்னுறவும் சாய்த்திடுவர்
களைப்புமிக நீயடைந்து
கவலைக்கடல் நீயாழ்ந்து
கண்சற்றே மூடுகையில்
கண்ணிமை பிடுங்கியுன்
கனவுப்பயணம் சீரழித்து
கட்சிக்கொடி நக்கிடுவர்

கடலுக்கடியில் ஒரு புயல்



கடலுக்கடியில் ஒரு புயல்
===•••===•••===•••==
சட்டென நிலைகுத்தின அலைகள் 
அரண்களில் திடீரென முளைத்த
அரக்கக் கைகளில் 
அலைகளின் விரல்கள்
வலுக்கட்டாயமாக முறிக்கப்பட்டன
பறப்பதற்குத் தயாராயிருந்த
புறாக்களின் சிறகுகள்
கண்ணுக்குத் தெரியாமலேயே
பிய்த்தெறியப்படத் தொடங்கின

அரண்களுக்குள் விழுந்த ஓட்டைகளில்
விஷங்களுடன் உள்நுழைந்த அரவங்களை
எந்த அலைகளும் கண்டு கொண்டதாகத்
தெரியவில்லை..
கரங்களுக்குள் ஏந்தியிருந்த
வெண்தாள்களின் வயிற்றுப் பகுதியில்
செங்குருதிகள் மைகளாகக் கொட்டுமென
விரிந்திருந்த மணற்பரப்புகளும் எதிர்பார்க்கவில்லைதான்..
ஈரப்பார்வையுடன் ஸ்தம்பித்துப் போயிருந்த
அலைகளுடன்கூட அவற்றுக்கு நேரமில்லை
கைகுலுக்க..

நிலைக்குத்திய அலைகளுக்காகவும்
நிர்மூலமான மணற்பரப்புகளுக்காகவும்
நடுக்கடலில் மையமிடத் தொடங்கியது
கடலுக்கடியில் ஒரு புயல்!!

#முனியாண்டி_ராஜ்.

கொஞ்சம் துளிப்பா

சுவரில் ஓடியது
வாலறுந்த பல்லியொன்று
நம்பிக்கைத் துளிர்ப்புடன்
===========================
அடர்ந்த மழை வெள்ளத்தில்
ஆனந்தத்துடன் சிறுவர்கள் விட்டனர்
காகிதக் கப்பல்
==========================
போக்குவரத்து நெரிசலின்
எஞ்சிய நேரத்தில் கிடைத்தது
வாசிப்பு
==========================

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...