Friday, February 10, 2017
கழுவப்படாத சாதிகள்

கழுவப்படாத சாதிகள்
===•••===•••===••
இந்த வீச்சங்களை
நீங்கள் பொறுத்துத்தான் ஆக வேண்டும்
பிணங்களைத் தூக்கித்
தோள் மேல் சுமந்தலையும்
நீங்கள் பொறுக்காமல் யார் பொறுப்பது
உங்கள் தோள்களின் மேல்
ஏற்றப்பட்டவை பாரம்பரியத் தொடர்ச்சியென
சுமைகளை இறந்த காலத்திற்குள் தள்ளிவிட
நீங்கள் மிகவும் முயற்சிக்கலாம்
அழுகி ஒழுகும் பிணங்களின் சதைகளை
பாட்டன் முப்பாட்டன் பெயர்சொல்லி
நாசியை மூடிக்கொள்ளலாம்
நவநாகரீக பாதை வலங்களில்
உங்கள் வீச்சங்களை
எங்கள் மூக்குக்குள்ளும் செருகும்
உங்கள் அதிகாரத் தோரணைகளை
எங்ஙனம் நாங்கள் பொறுப்பது
வட்டங்களுக்கு வெளியே
பாதைபல தேடிச் சென்றும்
ஒற்றைப் பாதையில் மட்டுமே
உங்கள் விளக்குகளை எப்படி ஏற்றலாம்
ஆரியன் ஏற்றிவிட்ட
அந்த அழுக்குகள் இருக்கும்வரை
பிணங்கள்
உங்கள் தோள் மேலேயே இருக்கட்டும்!
#முனியாண்டி_ராஜ்.
ஒரே வரியில் நீ
ஒரே வரியில் நீ..
===•••===•••===
வரிகள் கிடைக்காமல்
அந்த வார்த்தைகள்அலைந்த போதுதான்
நீ வந்து சேர்ந்தாய்
உன்னை எங்கே வைப்பது
எதுகையிலா மோனையிலா
சந்தத்திலா சீரின் வரிசைகளிலா
புதிய குழப்பத்தில்
வரிகள் வாதங்கள் புரியத் தொடங்கின
முடிவுகள் முடிக்கப்பட்டு
எழுகின்ற தருணத்தில்
அந்த ஒரு வார்த்தை
பல வார்த்தைகளைப் பிரசவிக்கத் தொடங்கியது
உன் அங்கங்கள் ஒவ்வொன்றிலும்
ஊறியெழுந்த வார்த்தைகளும்
உன் உதடு உடைக்கா மௌனத்தை
மொழி பெயர்த்த காற்றும்
உன் பாதங்களின் அச்சுகளை
அளவெடுத்துப் பார்த்த நிலமும்
உன் விழிகளுக்குள் குளித்தெழுந்த
மெல்லிய சிறு குளிரும்
வெவ்வேறு மொழிகளை
என்னுள் திணிக்கும் வேகத்தில் இறங்க
சலசலப்பேதுமின்றி..
ஒரே வரியில் உன்னை எழுதி நிமிர்ந்தேன்
ஒரு கவிதை
வார்த்தைகளுக்குள் அடங்க மறுக்கிறதென்று!
FEB 14... VALENTINE DAY
Monday, November 14, 2016
இது_மரணமல்ல ...
#இது_மரணமல்ல ...
===•••===•••===•••
நம்பிக்கையின் கடைசித்துளியாய்
ஒட்டியிருக்கிறது
இன்னும் கொஞ்சம் உயிர்
ஓர் அடர்ந்த மழையின் எச்சங்களென
அவ்வளவு எளிதில்
நீங்கள் தூக்கி வீசவும் முடியாது
கதிரவனின் வன்கதிர்கள் தின்ற
மீதமெனவும்
நீங்கள் நிராகரிக்க முடியாது
ஒவ்வொரு மழைக்கும் பின்னும்
ஒவ்வொரு அதிகாலைக்குப் பின்னும்
இந்தக் கடைசித் துளிகள்
ஒரு மெல்லிய துணிச்சலை
எரிய விட்டுக் கொண்டே வருகிறது
எங்கள் உதிரங்களில்..
உதிர்ந்த விழுந்த துளிகள்
சிற்றிலைகள் தாங்கும் விருட்சங்களுக்கு
உரமாகவேதான் விழுகின்றன...
உயிரின் கடைசிப் பயணமல்ல
இந்தத் துளி!
#முனியாண்டி_ராஜ்.
===•••===•••===•••
நம்பிக்கையின் கடைசித்துளியாய்
ஒட்டியிருக்கிறது
இன்னும் கொஞ்சம் உயிர்
ஓர் அடர்ந்த மழையின் எச்சங்களென
அவ்வளவு எளிதில்
நீங்கள் தூக்கி வீசவும் முடியாது
கதிரவனின் வன்கதிர்கள் தின்ற
மீதமெனவும்
நீங்கள் நிராகரிக்க முடியாது
ஒவ்வொரு மழைக்கும் பின்னும்
ஒவ்வொரு அதிகாலைக்குப் பின்னும்
இந்தக் கடைசித் துளிகள்
ஒரு மெல்லிய துணிச்சலை
எரிய விட்டுக் கொண்டே வருகிறது
எங்கள் உதிரங்களில்..
உதிர்ந்த விழுந்த துளிகள்
சிற்றிலைகள் தாங்கும் விருட்சங்களுக்கு
உரமாகவேதான் விழுகின்றன...
உயிரின் கடைசிப் பயணமல்ல
இந்தத் துளி!
#முனியாண்டி_ராஜ்.
Thursday, November 10, 2016
வருகை
அவள் எப்போதாவதுதான் வருவாள்
அதன் நேரமோ பொழுதோ
உறுதியற்ற நிலையிலேயே இருக்கும்
பெரும்பாலும்
ஏதோ ஒரு இறுக்கத்திலும் கனத்தலிலும்
மனம் எங்கேயாவது மௌனித்திருக்கும்..
அவசரகதிகளில்
உடலின் அத்துணை அணுக்களிலிலும்
வன்மம் ஏதேனும் துளிர்க்கும் பொழுதுகளில்
வருடியாய் இருப்பதேயில்லை அவள்
அசதிகளில் சட்டெனச் சாய்ந்து
உறங்கங்களில் கரைந்துவிடும் நேரங்களிலும்
சரி ...
நேரம் துரத்திய விடியலில் விழிக்கும்போதும் சரி .....
அவள் வருவதேயில்லை..
கட்டங்கட்டமாக மனிதரோடு மனிதராய்
தொலையும் தருணங்களில்
எங்கோ ஒரு பாறையின் உச்சியில்
இருப்பதுபோல்...
பார்வைகளைப் பதித்துவிட்டு
உதடறியா ஒரு சிறுபுன்னகையுடன்
மறைந்தே போகிறாள்!
உயிர்பெறும் வடுக்கள் ...
உயிர்பெறும் வடுக்கள் ...
===•••===•••===•••==
வழக்கம் போலவே
மண்டையில் கொட்டிவிட்டுச் செல்கிறது
இந்த ஐப்பசியின் ஒருநாள்
விசையுந்திலிருந்து
உன்னைத் தூக்கியெறிந்துவிட்டு
தள்ளிப்போய் நின்றது அந்தக் கனவுந்து
இரத்த வெள்ளத்தில் நீயும்
கண்ணீர் வெள்ளத்தில் நானும்!
திடீரென வறண்டுபோனது
தொண்டை மட்டுமல்ல..!!!
சிலைபோல் நின்றவனை
யாராவது உசுப்பி விட்டிருக்க வேண்டும்
சுற்றியிருந்த கூட்டத்தில்
வேற்றுக்கிரகவாசியாய் வேறான பிறகு
என்ன செய்ய..!!
சுற்றியிருந்த நாளிதழ்களால்
உன் முகத்தை மூடிவிட்டு
நீ
இறந்து விட்டதாய் உறுதி செய்திருந்தார்கள்
யாரோ.......
கவான்?* ... என்ற வார்த்தைகள்
உடலை மட்டுமல்ல
உயிரையும் உலுக்கிச் சென்றன...
அவசர ஊர்தியில்
நீ கொண்டு செல்லப்படும்போது
நான் மட்டும் அப்படியே..!
கூட்டம் கலைந்த பின்னும்
தனித்த ஒருவனாய்
அந்தப் பகலும்
இரவில் கரைந்து போகும்வரை......!!!
வழக்கம்போலவே
தலையில் கொட்டிவிட்டுப் போகிறது
இந்த ஐப்பசிகளில் ஒருநாள்
கையாலாகாதவனுக்காக....!!
(*கவான் - நண்பன்)
#முனியாண்டி_ராஜ்.
===•••===•••===•••==
வழக்கம் போலவே
மண்டையில் கொட்டிவிட்டுச் செல்கிறது
இந்த ஐப்பசியின் ஒருநாள்
விசையுந்திலிருந்து
உன்னைத் தூக்கியெறிந்துவிட்டு
தள்ளிப்போய் நின்றது அந்தக் கனவுந்து
இரத்த வெள்ளத்தில் நீயும்
கண்ணீர் வெள்ளத்தில் நானும்!
திடீரென வறண்டுபோனது
தொண்டை மட்டுமல்ல..!!!
சிலைபோல் நின்றவனை
யாராவது உசுப்பி விட்டிருக்க வேண்டும்
சுற்றியிருந்த கூட்டத்தில்
வேற்றுக்கிரகவாசியாய் வேறான பிறகு
என்ன செய்ய..!!
சுற்றியிருந்த நாளிதழ்களால்
உன் முகத்தை மூடிவிட்டு
நீ
இறந்து விட்டதாய் உறுதி செய்திருந்தார்கள்
யாரோ.......
கவான்?* ... என்ற வார்த்தைகள்
உடலை மட்டுமல்ல
உயிரையும் உலுக்கிச் சென்றன...
அவசர ஊர்தியில்
நீ கொண்டு செல்லப்படும்போது
நான் மட்டும் அப்படியே..!
கூட்டம் கலைந்த பின்னும்
தனித்த ஒருவனாய்
அந்தப் பகலும்
இரவில் கரைந்து போகும்வரை......!!!
வழக்கம்போலவே
தலையில் கொட்டிவிட்டுப் போகிறது
இந்த ஐப்பசிகளில் ஒருநாள்
கையாலாகாதவனுக்காக....!!
(*கவான் - நண்பன்)
#முனியாண்டி_ராஜ்.
தூண்டில்
ஒவ்வொரு தூண்டிலிலும்
புழுவாய் நெளிந்து கொண்டிருந்தன அவை..
ஆசையில் பட்டெனக் கௌவும் மீனாய்
அவர்கள்தாம் வரித்து வைத்திருந்தார்கள்
என்னை ..
விற்பனை முகவர்களின் புழுக்களில்
நீந்திநழுவிச் செல்லும் போதும்
கைப்பேசிகளில் கழுத்தறுபட்டு
அழுகின்றன அழைப்புகள்..
நிராகரிக்கத் திணறும் தருணங்களில்
மூளையும் சலவை செய்யப்படும்
மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
துணிவுடன் மன்னிக்கவும் என்று!
#முனியாண்டி_ராஜ்.
புழுவாய் நெளிந்து கொண்டிருந்தன அவை..
ஆசையில் பட்டெனக் கௌவும் மீனாய்
அவர்கள்தாம் வரித்து வைத்திருந்தார்கள்
என்னை ..
விற்பனை முகவர்களின் புழுக்களில்
நீந்திநழுவிச் செல்லும் போதும்
கைப்பேசிகளில் கழுத்தறுபட்டு
அழுகின்றன அழைப்புகள்..
நிராகரிக்கத் திணறும் தருணங்களில்
மூளையும் சலவை செய்யப்படும்
மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
துணிவுடன் மன்னிக்கவும் என்று!
#முனியாண்டி_ராஜ்.
Subscribe to:
Posts (Atom)
நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...
-
நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...
-
தலைப்பு : ஒரு போர்வீரனின் இறுதி வாக்குமூலம் இம்மடல் உன் கை சேருமா என அறியேன் போர் முரசு கொட்டிக் களம் செல்ல இது மனிதர் காலமல்ல......
-
அவனின் நிறம் ===•••===••• சரிந்த விழுந்திருந்த தேகங்களிலும் ஆறாய் பெருகிப் பாய்ந்திருந்த குருதிகளிலும் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள் ...









