Sunday, April 3, 2016

துரோகம்


சட்டென முகம் இழுத்து
முதலையின் வாயிலிருந்து விடுபட்டேன்
காட்டு விலங்குகள் கொடூரமாய் பாய
ஆபத்தின் சிக்கல்களை அறிவு
மீட்டெடுத்தது.....
குழிக்குள் விழப்போன காலை
விழிகள் அன்பாய் காப்பாற்றின....
வாழ்த்து சொன்ன நண்பன்
தோளில் கை போட்டான்...
மெல்ல மெல்ல கழுத்து இறுக்கப்பட்டும்
மனம் மட்டும் ஏனோ...
உயிர் போகும் தருணம் எச்சரித்தது
காலம் கடந்து!!!

**முனியாண்டி ராஜ்.**

ஏக்கம்

பைய பைய மடியும்
ஓர் இதயத்தின் கண்ணீர் என
எண்ணாதே....
உனக்காக சேர்த்த கனவுகளின் 
இறுதி யாத்திரையாகவும் இது இருக்கலாம்..
எனக்காக நீ எழுப்பிய
சொற்மாடங்களின் சிதைவுகளாகவும்
அமையலாம் ...
நீயே ...
வழக்கம் போலவே தெரிவு
உன் வசமே இருப்பதால் !!!

முதுமை


ஒடுங்கிய வயிறும் ஒடிந்த உருவமுமாய்
வீதியோரம் வீற்றிருந்தது அந்த உருவம் 
கிழிசல் ஆடைகளும்
முகம் கிழித்த மயிர்களும்
வறுமைக்கு விலாசம் கொடுத்தன..
காலொன்று இல்லாமையைத்
தாங்குக் கட்டையும்
கையொன்று கழன்றதைத்
தொங்கிய சட்டையும் !

ஐயா........
உதடுகள் காய்ந்த குரலில்
யாசகம் கெஞ்சலாய் வழிந்தது..
தகரக்குவளையின் சிணுங்கிய சத்தங்கள்
சில்லறைகள் ஓரிரண்டைக் கூறின..
அலட்சியப் பார்வையில் அவனை வெறித்து
சாலையைக் கடந்தேன்..

குளுகுளு காரில் வெயில் மறந்து
வீடு அடைந்தும்...
காதோரம் கேட்டுக் கொண்டே வந்தது
அந்தச்
சில்லறைச் சத்தங்கள் !!!

**முனியாண்டி ராஜ்.**

பிச்சை


ஒடுங்கிய வயிறும் ஒடிந்த உருவமுமாய்
வீதியோரம் வீற்றிருந்தது அந்த உருவம் 
கிழிசல் ஆடைகளும்
முகம் கிழித்த மயிர்களும்
வறுமைக்கு விலாசம் கொடுத்தன..
காலொன்று இல்லாமையைத்
தாங்குக் கட்டையும்
கையொன்று கழன்றதைத்
தொங்கிய சட்டையும் !

ஐயா........
உதடுகள் காய்ந்த குரலில்
யாசகம் கெஞ்சலாய் வழிந்தது..
தகரக்குவளையின் சிணுங்கிய சத்தங்கள்
சில்லறைகள் ஓரிரண்டைக் கூறின..
அலட்சியப் பார்வையில் அவனை வெறித்து
சாலையைக் கடந்தேன்..

குளுகுளு காரில் வெயில் மறந்து
வீடு அடைந்தும்...
காதோரம் கேட்டுக் கொண்டே வந்தது
அந்தச்
சில்லறைச் சத்தங்கள் !!!

**முனியாண்டி ராஜ்.**

பால்யம்


மொழி புரியாமலும் மதம் பிரிக்காமலும்
குழந்தை மொழிகள் வாழ்ந்த காலமது..
அறிவியலின் எந்த ஈரமும்
மனம் நனைக்காமல் மனிதம் வாழ்ந்த காலம்
பால்யம் என்பது வார்த்தைகளில் அல்ல
பாமரர்களின் வாழ்க்கையில்!
தோள் பற்றி நடக்கும்போதே
தோழமை உதிரம் கலந்த கதை..
இணையமும் புலனமும்
குருதிவழி கலக்கும் முன்னே
குரல்களில் மட்டுமே சூழலமையும்…

திறந்தே இருக்கும் சாளரங்களே
நட்பின் நாற்றங்கால்களாய்..
அறிவியல் தொழில்நு்ட்ப வளர்ச்சியின்
அறுவடை வேகத்தில்..
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்..
அந்த
கிராமத்துப் பால்யங்கள்…


கைக்கெட்டும் தூரத்தில் நிலா


திடீரென தூக்கத்தை உலுப்பி எடுத்து
எழுப்பியிருந்தது அந்த நிலா..
விலகிய ஜன்னல் சீலைகளில்
மழை நின்று மேகங்கள் விலகியிருப்பது தெரிந்தது
கொஞ்சமாய் எட்டிப் பார்த்த
என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கியது
களவு போன உறக்கங்களைத் தேடி
மீண்டும் உறங்க முயன்றும்
வைத்த கண் வாங்காமல்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த
மழையில் நனைந்த நிலா….
துவட்டிவிட கைகள் இருந்தும்
மனம் மறந்த இடங்களைத் தேடி
போர்வைக்குள் ஒளிந்து
தூக்கங்களை ஏமாற்றிக் கொண்டே ….

இரவும் அப்படியே கழிந்தது
இருண்ட அந்த நிலவுக்காக!!!

Friday, March 25, 2016

முறிவுகள்






மனங்கள் முறிந்த பிறகு
மணங்கள் உடைந்து விட்டன....
அட்சதை தூவி ஆசிர்வதித்தது அரைநாளில் அஸ்தமனமாய்..... 
ஆயிரம் பேர் வாழ்த்தியிருக்கலாம் ஆலமரமாய் வாழவேண்டுமென
விவாகத்தை இரத்தாக்கிவிட்டன வெறும்
கறுப்பு ஆடைகள்!

பிரிதலில் உனக்கு விருப்பமோ இல்லையோ
அரைமனதோடு போட்ட கையெழுத்து தலையெழுத்தாய் ஏற்றுக் கொள்ள மறுதலிக்கிறது மனம்...இன்னும்!
மூளைக்குள் முட்களைச் செருகியவர்கள் முணுமுணுக்கிறார்கள்
இப்போது வாழாவெட்டியாம்!
உன் பாதை என் பாதையென பிரித்துக் கொண்ட பிறகு அடிக்கடி நடக்கின்றன விபத்துகள்
ரணங்கள் மருந்தைத் தெரியாமல் இதயமெங்கும்!!
தனிமையின் சதுக்கத்தில் தண்ணீரெல்லாம் சுடுகிறது இரவில்...
உண்மைதான்
நீ சொன்னது இன்னும் செவிகளை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது..
நமது பாதைகள் என்று பிரித்த பிறகு
நாலாந்தர வார்த்தைகள் எல்லாம்
வாசல் வரைதான் என்றாயே
வரவேற்பறை வரைக்கும் அழைத்து வந்தது தவறா....தப்பா.. கேட்டிருக்கலாம்..
நீயாவது.. மீண்டும் சொல்லியிருக்கலாம்
தாமரை இலை மேல் தெறித்து விழும் நீராய்.....
எப்போதாவாது சந்தித்துக் கொள்ளும் நமது புன்னகைகள் கூட ஒட்டாமல் போகின்றன..
இமைக்க மட்டுமல்ல
இம்சிக்கவும் தெரியும் விழிகளுக்கு

ஒவ்வொரு ஞாயிறும் வாசலை எதிர்பார்த்து
சனி இரவே விடிந்து விடுகிறது
என் விழிகள்
குழந்தைகள் விட வரும் உன்னிடம்
மனம் திறந்து பேச மன்றாடுகிறது

காருக்குள் இருந்தே கையசைக்கிறாய் குழந்தைகளிடம்!
ஓரிரு விரல்கள் மட்டும்
உயிரை உரசி விட்டுப் போகின்றன..
நீ உள்ளுக்குள் வந்தாலும்
ஒளிந்து கிடக்கும் வார்த்தைகள்
உதட்டை உடைக்கப் போவதில்லை

வார்த்தைகள்
இரும்புத் திரையாய் இறங்கியிருப்பதாய் இருவருமே நினைத்துக் கொள்கிறோம் குழந்தைகள் புரியாமல் கேட்கின்றன
அடுத்த ஞாயிறு நீ வருவாயா அம்மா...
அப்பா கேட்கச் சொன்னார்..
சிரித்துக் கொண்டே சிலிர்க்கிறேன்

உன் அப்பாவின் 'உம்'......
கூறமுடியவில்லை!!!

<முனியாண்டி ராஜ் >

Tuesday, March 22, 2016

வனமழிப்பு

வேர்கள் விரிந்த
ஒரு வனாந்திரத்தின் வயிற்றுப்படுகையில்
எழுந்து வருகிறது
என் எச்சம் ..
பச்சையங்கள் மடிந்த இந்த
வறட்டு நிலங்களில்
கற்பழிக்கப்பட்ட என் சகமரங்கள்
விறகாகமலேயே எரிக்கப்பட்டு விட்டன..
நாளை
கட்டடமாகவோ..
நெடுஞ்சாலைகளாகவோ..
புகை க்க்கும் தொழிற்பேட்டைகளாகவோ
இந்த வனங்களை மறக்கடிக்கலாம்..
அதற்குள்
காய்ந்த எங்கள் மரணங்களில்
கொஞ்சமேனும் நம்பிக்கை தருகிறேன்...
வா .. கண்ணே!

€€ முனியாண்டி ராஜ்.€€


நீரின்றி அமையாது உலகம்


















ஒற்றைக் கொம்பில் சிறகுகள் மடிந்து 

பார்வையைக் கரைத்துக் கொண்டிருந்தது
அந்த வண்ண உயிர்..
கதிரவனின் சினம்
வனமெங்கும் விரிந்திருந்தது..
முகம் வெடித்த கால்வாய்கள்
நீரின்றி நிர்வாணம் காத்தன..
பச்சை வெளுத்த புல்வெளிகள்
ஆங்காங்கே வானம் பார்த்த படி..

பறந்து பறந்து அலைந்த
களைப்பாக இருக்கலாம்..
ஒற்றைக் கொம்பின் அசைவுகளில்
தன்னைச் சுதாகரித்துக் கொண்டிருந்தது
அது..
விழிகளின் ஓரம்
மௌனம் காத்தது மிரட்சி..
கனிம நீரின் மூடியில்
நீரூற்றிச் சற்று நகர்ந்தேன்..
இறக்கைகள் விரிய சர்ரென
இறங்கியது...

நீரின்றி அமையாது உலகம்..

#முனியாண்டி ராஜ்.#


ஒரு இரயில் பயணம்

ஒரு தொடர்ப்பயணத்தின்
இடைப்பயணியாய் நுழைந்தவள்..
இறங்கிவிட்ட உன்னை எண்ணி
இறங்க முடியாமல் தவிக்கிறது 
இதயம் ..
ஒவ்வொரு பயணங்களிலும் கடந்தோடும்
மரங்களாகட்டும்..
மௌனங்களாகட்டும்
சட்டென சறுக்கி விழுகிறது
உன் நினைவுகளோரம்!




நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...