மொழி புரியாமலும் மதம் பிரிக்காமலும்
குழந்தை மொழிகள் வாழ்ந்த காலமது..அறிவியலின் எந்த ஈரமும்
மனம் நனைக்காமல் மனிதம் வாழ்ந்த காலம்
பால்யம் என்பது வார்த்தைகளில் அல்ல
பாமரர்களின் வாழ்க்கையில்!
தோள் பற்றி நடக்கும்போதே
தோழமை உதிரம் கலந்த கதை..
இணையமும் புலனமும்
குருதிவழி கலக்கும் முன்னே
குரல்களில் மட்டுமே சூழலமையும்…
திறந்தே இருக்கும் சாளரங்களே
நட்பின் நாற்றங்கால்களாய்..
அறிவியல் தொழில்நு்ட்ப வளர்ச்சியின்
அறுவடை வேகத்தில்..
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்..
அந்த
கிராமத்துப் பால்யங்கள்…
No comments:
Post a Comment